சுடச்சுட

  

  முதுகுளத்தூர் அருகே அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக பாஜக வேட்பாளரின் ஆதரவாளரின் வேண்டுகோளை ஏற்று தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக தெரிவித்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர், மேலச்சிறுபோது ஆகிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் தேர்தலில் யாருக்கும்  வாக்களிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். மேலும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 
     இந்நிலையில்  தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் இக்கிராமங்களுக்குச் சென்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்றார். இக்கிராம பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai