வாக்குச்சாவடியில் ஒரே பெயரில் 46 வாக்காளர்கள்: அதிகாரிகள் குழப்பம்

கமுதி அருகே ஒரு வாக்குச் சாவடியில் ஒரே பெயரில் 46 வாக்காளர்கள் உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். 

கமுதி அருகே ஒரு வாக்குச் சாவடியில் ஒரே பெயரில் 46 வாக்காளர்கள் உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். 
கமுதியை அடுத்துள்ள பாப்பனம் ஊராட்சியில் பாப்பனம் வாக்குச் சாவடியில் இக்கிராமத்தை சேர்ந்த 395 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் ஒரே பெயரில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 
இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வணங்கி வரும் முனியப்பசாமியின் பெயரை பிறக்கும் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கம். 
இதனால் ஒவ்வொரு வீட்டிலும் ஆண், பெண் குழந்தைகளுக்கு முனியசாமி அல்லது முனீஸ்வரி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில குடும்பத்தில் தந்தை பெயரும், மகன் பெயரும் முனியசாமி என உள்ளது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாப்பனம் கிராமத்தில் முனியசாமி மற்றும் முனீஸ்வரி என்ற பெயரில் 46 பேர் வாக்களர்களாக உள்ளனர். இப்பகுதி மக்கள் இந்த தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருக்கும், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் என இரண்டு வாக்குகள் அளிக்கும் நிலையில் உள்ளனர். 
ஒரே பெயரில் பல வாக்காளர்கள் இருப்பதால் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com