சுடச்சுட

  

  பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. 
   இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக் காலங்களில் பகல் வேளைகளில் அம்பாள் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது.
   இதன் சிறப்பு நிகழ்ச்சியாக புதன்கிழமை (ஏப். 17) காலை 11 முதல் 11.45 மணிக்குள் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யானை வாகனம், புஷ்பப்பல்லக்கில் பட்டண பிரவேசம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai