திருவாடானை அருகே வாகன சோதனையில் ரூ.11.50 லட்சம் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

திருவாடானை அருகே புதன்கிழமை தேர்தல் பறக்கும்படையினர் வாகனச் சோதனையின் போது வாக்காளர்களுக்கு

திருவாடானை அருகே புதன்கிழமை தேர்தல் பறக்கும்படையினர் வாகனச் சோதனையின் போது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட ரூ.11.50 லட்சத்தை பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை அருகே  கோடனூர் பேருந்து நிலையம் அருகே பாண்டுகுடிக்கு சென்ற காரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வழிமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயக்குமார், காவல் துறை சிறப்பு ஆய்வாளர் பாலுச்சாமி ஆகியோர் சோதனையிட்டனர்.
அப்போது அதில் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயக்குமார் புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் தளிர்மருங்கூரைச் சேர்ந்த சிவா (29), திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியைச் சேர்ந்த செந்தூர் பாண்டி (39), சென்னை சாலிக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (36) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து விருகின்றனர். விசாரணையில் இவர்கள் அதிமுக பிரமுகர்கள் என்பதும், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com