ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 1,031 பேர் தோ

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் மட்டும் 1,031 மாணவ, மாணவியர் தோல்வியடைந்திருப்பதே தேர்ச்சி விகிதம் சரிந்ததற்கு


ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் மட்டும் 1,031 மாணவ, மாணவியர் தோல்வியடைந்திருப்பதே தேர்ச்சி விகிதம் சரிந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது. 
ராமநாதபுரத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை 15,474 பேர் எழுதினர். இதில்,14,282 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 92.30 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கல்வித்துறை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 97 சதவிகித தேர்ச்சி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதப் பட்டியலில் மாநில அளவில் 4 ஆம் இடத்திலிருந்த ராமநாதபுரம், நடப்பாண்டில் 16 ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. அத்துடன் தேசியத் திறனறித் தேர்விலும் ராமநாதபுரம் கடந்த ஆண்டை விட பின்தங்கிவிட்டது. 
பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மிகவும் பின்தங்கியதற்கு காரணம் குறித்து கல்வித்துறை சார்பில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. அதனடிப்படையில், தற்போது மேற்கொண்ட ஆய்வின்படி மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வணிகவியல், பொருளாதாரம், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களில் அதிகளவில் மாணவ, மாணவியர் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. 
மாவட்ட அளவில், தமிழில் 111, ஆங்கிலம் 182, இயற்பியல் 180, வேதியியல் 119, கணிதம் 83, உயிரியல் 58, கணினி அறிவியல் 40, வணிகவியல் 88, பொருளாதாரவியல் 60, கணக்கியல் 48, வரலாறு 38 என பாடவாரியாக தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. 
பாடங்கள் வாரியாக தோல்வியைடந்த மாணவ, மாணவியர் எண்ணிக்கை அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாட ஆசிரியர்கள் குறித்தும் கல்வித்துறை சார்பில் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பள்ளி வருகை விவரங்களும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com