முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடியில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
By DIN | Published On : 04th August 2019 03:47 AM | Last Updated : 04th August 2019 03:47 AM | அ+அ அ- |

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட பொறுப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தலைமை வகித்தார். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் கே.ராமர், ராமநாதபுரம் கிளை ரெட்கிராஸ் தலைவர் எஸ்.ஹாரூன், செயலாளர் எம்.ராக்லண்ட் மதுரம், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஜஸ்டின்ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில் ஜூனியர்களை மனிதநேயமுள்ளவர்களாக மாற்றி ஜே.ஆர்.சி. எனும் இணைச்செயல்பாடு பள்ளி அளவில் சிறப்புடன் நடைபெற முனைப்போடு ஜே.ஆர்.சி.பொறுப்பாசிரியர்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டது. ஜே.ஆர்.சி.கல்வி மாவட்ட கண்வீனர் செ.அலெக்ஸ் வரவேற்றார். கே.ஜே.இ.எம். மேல்நிலைப் பள்ளி கவுன்சிலர் டி.சிவகுருராஜா நன்றி கூறினார்.