ராமநாதபுரத்தில் மின் கம்பிகளை திருடிய கட்டடத் தொழிலாளி கைது

ராமநாதபுரத்தில் கட்டடப் பணிகள் நடக்கும் இடங்களில் விலை உயர்ந்த மின்கம்பிகளைத் திருடியதாக கட்டடத்

ராமநாதபுரத்தில் கட்டடப் பணிகள் நடக்கும் இடங்களில் விலை உயர்ந்த மின்கம்பிகளைத் திருடியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகர் வனசங்கரி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஏ.விமல் (41). தனியார் கட்டுமான நிறுவன திட்டப் பொறியாளர். இவரது மேற்பார்வையில் பாரதியார் நகர் பகுதியில் கட்டடப் பணி நடந்து வருகிறது. 
கட்டடத்துக்கு தேவையான விலை உயர்ந்த மின்கம்பிகள் அடிக்கடி மாயமாகியுள்ளன. இதையடுத்து வேலை நடக்கும் கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  சென்று பார்த்துள்ளார். அப்போது ஒருவர் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சுமார் 600 மீட்டர் வயர் கட்டுகளை சாக்குப்பையில் போட்டு எடுத்துச்சென்றுள்ளார். 
அவரை மடக்கிப் பிடித்த விமல் இதுகுறித்து கேணிக்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து வயர்களை திருடியவரை பிடித்து விசாரித்தனர். அதில் பிடிபட்டவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சதீஷ் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த ரூ.25,300 மதிப்புள்ள மின்கம்பிகளை கைப்பற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com