மீன்வளத் துறை பணிக்கான தேர்வில் முதலிடம்: சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவிக்கு பாராட்டு
By DIN | Published On : 09th August 2019 07:32 AM | Last Updated : 09th August 2019 07:32 AM | அ+அ அ- |

மீன்வளத் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி மகேஸ்வரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்திய மீன்வளத் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில், தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற மா.மகேஸ்வரி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து பணிக்குத் தேர்வானார். அவருக்கு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அகாதெமியின் தேர்வு ஒருங்கிணைப்பாளர் வி. அந்தோணி பட்டுராஜ் மற்றும் பணியாளர்களும் பாராட்டு தெரிவித்தனர்.