சுடச்சுட

  

  திருவாடானை அருகே தண்ணீர் தேடி வந்த மான் நாய்கள் கடித்து பலி

  By DIN  |   Published on : 14th August 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே  நாய்கள் கடித்ததால் உயிரிழந்த மானை செவ்வாய்க்கிழமை  வனத் துறையினர் மீட்டு  உடற்கூறு ஆய்விற்கு பின் புதைத்தனர்.         
  திருவாடானை அருகே அஞ்சுகோட்டை, செங்கமடை, சிறுகம்பையூர், மணிமுத்தாறு, வரத்து கால்வாய்கள் மற்றும் பெரியகண்மாய்  பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் காட்டு கருவேல மரக்காடுகள் உள்ளன. இதில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. 
  இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக போதிய மழையின்றி கண்மாய்கள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. அதனால் இப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அஞ்சுகோட்டை கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. 
  பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினர் உயிரிழந்த மானை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
  இதேபோல்  இப்பபகுதியில் மான்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai