சுடச்சுட

  

  திருவாடானை மகாலிங்க மூர்த்தி ஆடி உற்சவ விழா: மதுக்குட ஊர்வலம்

  By DIN  |   Published on : 14th August 2019 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானையில் உள்ள  மகாலிங்க மூர்த்தி ஆடி உற்சவ  விழாவையொட்டி  மதுக்குட ஊர்வலம் நடைபெற்றது.
  திருவாடானையில் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மகாலிங்க மூர்த்தி கோயிலில் ஆடி உற்சவ விழா  கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.  
  கோயிலில் பரிவார தெய்வமான மல்லிகுடி ஆத்தாள் என்ற சுவாமிக்கு  பக்தர்கள் மதுக் குடம் தலையில் ஏந்தி வீதி உலா வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
  பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழஇ திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஆக.16)  நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai