சுடச்சுட

  

  வெடிகுண்டு வீசி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு: தலைமறைவான கணவரை பிடிக்க போலீஸார் மிரட்டுவதாக பெண் புகார்

  By DIN  |   Published on : 14th August 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெடிகுண்டு வீசி மீன்பிடித்த விவகாரத்தில் தனது  கணவர் மீது போலீஸார் பொய் வழக்குப்பதிந்து மிரட்டுவதாக  குழந்தைகளுடன் வந்த பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
   ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் படகுகளில் செல்லும் மீனவர்கள் வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு தொண்டி புதுக்குடி வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள்  வெடிகுண்டு வீசி மீன்பிடித்ததாக போலீஸார் வழக்குப்பதிந்து சிலரைக் கைது செய்தனர். படகின் உரிமையாளர் என்ற அடிப்படையில் செந்தில்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  இந்நிலையில் தனது கணவரை ஒப்படைக்குமாறு போலீஸார் மிரட்டுவதுடன், வீட்டையும் பூட்டிச் சாவியை கொண்டு சென்றதாக செந்தில்குமாரின் மனைவி காளீஸ்வரி, தனது குழந்தைகளுடன்,  ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார். காளீஸ்வரியுடன், அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.  இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். 
  இதுகுறித்து காளீஸ்வரி கூறியது: தொண்டி பகுதியில் புதுக்குடியிருப்பு வடக்கு காலனியில் வசிக்கும் நாங்கள் 4 படகுகள் வைத்திருந்தோம். ஆனால், மீன்பிடி தொழில் நசிந்து விட்டதால் தற்போது ஒரு படகை மட்டும் வாடகைக்கு விட்டு வருகிறோம். எனது கணவர் செந்தில்குமார் படகில் மீன்பிடிக்கச் செல்வதில்லை. ஆனால், தொண்டி போலீஸார் எனது கணவர் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளனர். கணவர் தலைமறைவான நிலையில், அவரை ஒப்படைக்கக் கோரி என்னையும், குழந்தைகளையும் மிரட்டுகின்றனர் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai