அழகுதாய் அம்மன், சிவகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

கமுதி அருகே கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 

கமுதி அருகே கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 
கமுதி அடுத்துள்ள குண்டுகுளம் கிராமத்தில் அழகுத்தாய் அம்மன், சிவகாளியம்மன் கோயில்  ஆடித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அழகுத்தாய் அம்மன் மற்றும் சிவகாளியம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள்  ஏராளமானோர் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். கடந்த 3 நாள்களாக பக்தர்களுக்கு அன்னதானம்  நடைபெற்றது.
 இத்திருவிழாவை முன்னிட்டு  புதன்கிழமை  மாவட்ட அளவிலான கபடி போட்டி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை குண்டுகுளம் கிராம மக்கள், இளைஞரணியினர் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com