ராமேசுவரத்தில் தவித்த ஒடிசா மாநில மாணவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ராமேசுவரம் ரயில் நிலையத்தில்  தவித்துக் கொண்டிருந்த, ஒடிசா மாநில மாணவர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில்  தவித்துக் கொண்டிருந்த, ஒடிசா மாநில மாணவர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரியோசன்ராவ் மகன் சாந்தனராவ் (17). 11 ஆம் வகுப்பு மாணவர். கடந்த ஜூலையில் நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால், அந்த மாணவர் கடந்த 4 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் ராமேசுவரம் வந்துள்ளார். ரயில் நிலையத்தில் இறங்கி எங்கு செல்வது எனத் தெரியாத நிலையில் தவித்துள்ளார். அப்போது ரோந்து சென்ற ராமேசுவரம் ரயில் நிலையப் பாதுகாப்பு போலீஸார் மாணவரிடம் விசாரித்தனர். பின்னர் அவரை மீட்டு ரயில்வே போலீஸார், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம்  ஒப்படைத்தனர். 
அதனைத் தொடர்ந்து அவர், ராநாதபுரம் மாவட்டக் குழந்தைகள்  நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆரம்பத்தில் எதுவும் பேசாமல் இருந்த மாணவர் பின்னர் தனது பெற்றோரின் விவரத்தை கூறியுள்ளார். 
இதையடுத்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திங்கள்கிழமை ராமநாதபுரம் வந்து, காப்பகத்தில் இருந்த சாந்தனராவை அழைத்துச்சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com