சுடச்சுட

  

  திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
   அதனை தொடர்ந்து இங்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் குத்து விளக்கி ஏற்றி தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.மங்கலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில்  புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு புதன்கிழமை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 
  அதனை தொடர்ந்து இங்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கை மண்டலம் பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா,  சிவகங்கை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சாந்தி, ராமநாதபுரம் இளநிலை பொறியாளர் பாண்டீஸ்வரி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி, இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai