சுடச்சுட

  

  சாயல்குடி அருகே புதன்கிழமை மின்கசிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் தீப்பற்றி எரிந்தன.
  சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தைச் சேர்ந்த  மாடன் மகன் காசிலிங்கம் என்பவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றிது. அதனை அணைக்க முயன்ற போது அடுத்தடுத்து இருந்த பளையகாரன் மகன் முருகேசன், சோட்டை மகன் குருசாமி ஆகியோரது வீடுகளும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதில் 3 வீடுகளும் முற்றிலும் தீப்பற்றி எரிந்து சேதமாயின. 
  இதில் காசிலிங்கம் வீட்டில் ரூ.5 லட்சம், முருகேசன் வீட்டில் ரூ.3 லட்சம், குருசாமி வீட்டில் ரூ.50 ஆயிரம்  மதிப்பிலான பொருள்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த சாயல்குடி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இதுகுறித்து சாயல்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai