சுடச்சுட

  

  ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக் கோரிக்கை

  By DIN  |   Published on : 15th August 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கே.ராமமூர்த்தி இணை ஆணையர் கல்யாணியிடம் புதன்கிழமை மனு அளித்தார். 
  அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:  ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைக்கிறது. மேலும் தீர்த்தம், பிரசாதம் விற்பனை, தரிசன கட்டணம் என ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் வரக்கூடிய இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு தீர்த்தம், விபூதி, பிரசாதம் உள்ளிட்ட எந்த பொருள்களும் வழங்குவதில்லை.
   பல்வேறு சன்னிதிகளில் பூசாரிகள் இல்லாததால் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், சுவாமி, அம்பாள் தரிசனம் மற்றும் பூஜைகள் செய்ய 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  இதனிடையே கோயில் வருவாயில் இருந்து  பக்தர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில் பகதர்களின் மனதை மேலும் புண்படுத்தும் வகையில் தரிசன கட்டணத்தை உயர்த்தி உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால் பக்தர்களின் உணர்வுகளை அறிந்து உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai