சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நூலகர் தின விழாவுக்கு நூலகர் அற்புதஞானமணி தலைமை வகித்தார். பேராசிரியை என்.ஜெபாசெளபாக்கியராணி  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலகத்தின் சிறப்பு குறித்து பேசினார். இதில் ஏராளமான வாசகர்களும், பொது மக்களும் கலந்துகொண்டனர். நூலகர் சே.கனகராஜ் நன்றி கூறினார்.  
  கமுதியில் விழா: கமுதி வட்டார நூலகத்தில் நடைபெற்ற நூலகர் தினவிழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் ஹரி தலைமை வகித்தார். நூலகர் ஆர்.கண்ணதாசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியரும், நூலக வாசகருமான தங்கவேல் சிறப்புரையாற்றினார். வாசகர் வட்டம் தவமணி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai