ராமநாதபுரம் டி.எஸ்.பிக்கு குடியரசுத்தலைவர் பதக்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணைக் கண்காணிப்பாளர்

ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணனுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் கிடைத்துள்ளது.
 ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின்  துணைக் கண்காணிப்பாளராக இருப்பவர் உன்னிகிருஷ்ணன் (53). இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடுவைச் சேர்ந்தவர். சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்தவர். 
கடந்த 1996 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகரில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்தபோது கொடுங்குற்றவாளிகளை கைது செய்தும், துப்பாக்கி, வெடிகுண்டுகளை கைப்பற்றியும் துணிச்சலுடன் செயல்பட்டார். 
இதையடுத்து அவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 
அவர் உளவுப்பிரிவிலும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018 ஜனவரியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.
  இவரது சிறப்பான பணிகளுக்காக தமிழக அரசின் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவர் குடியரசுத் தலைவரின் சிறந்த காவல்துறை சேவைக்கான பதக்கத்துக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு வரும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பதக்கம் வழங்கப்படவுள்ளது. 
அவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், மகள் ஆர்ஷாகிருஷ்ணா மற்றும் மகன் ஆதித்யா கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com