ராமேசுவரம்- ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ராமேசுவரம்-ஹைதராபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேசுவரம்-ஹைதராபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராமேசுவரம்-ஹைதராபாத் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வண்டி எண் 07686, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். 
இந்த ரயில்  ராமேசுவரம் ரயில் நிலையத்தில் புறப்படும் நாள்கள்: ஆகஸ்ட் 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
இந்த ரயில் நிற்கும் இடங்கள்: மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை , கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கண்டோன்மென்ட் காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் ஓங்கோல், தெனாலி, குண்டூர் மற்றும் செகந்திராபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை கோட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரயில்கள் ரத்து: மும்பையில் தொடர்மழை காரணமாக ஆகஸ்ட் 18 ஆம் தேதி தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 19567, தூத்துக்குடி - ஓகா வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ஆகஸ்ட் 17  மற்றும் 24 ஆகிய தேதிகளில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 11044, மதுரை - லோக்மான்ய திலக் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com