சுடச்சுட

  

  குடிநீருக்கு 1 கி.மீ. அலைந்து தவிப்பு: ஆட்சியரிடம் கிராம பெண்கள் மனு

  By DIN  |   Published on : 20th August 2019 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சின்னபாளையரேந்தலில் குடிநீருக்காக தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அலைந்தும் போதிய தண்ணீர் கிடைக்காததால் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர். 
  கீழக்கரை அருகில் உள்ள சின்னபாளையரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தனர். அவர்கள் ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு விவரம்: 
  சின்னபாளையரேந்தல் கிராமத்தில் 200 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.
  எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நான்கு மாதங்களுக்கு முன்பே வற்றிவிட்டது. அரசு சார்பில் கிராமத்தில் உள்ள 40 வீடுகளுக்கு மட்டும் தலா 2 குடம் என்ற அளவில் தண்ணீர் வழங்குகின்றனர். ஆனால் அந்தத் தண்ணீர் பயன்பாட்டுக்கு போதியதாக இல்லை. 
  கிராமத்திலிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அலைந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் கசியும் நீரையே பிடித்து வரவேண்டியுள்ளது. கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருவதால்  தண்ணீருக்காக பெருளவு நேரத்தைச் செலவிடமுடியவில்லை. 
  அதேநேரத்தில் சின்னபாளையரேந்தல் அகஸ்தியர் கோயில் அருகில் குடிநீர் குழாய் அமைத்துத் தருமாறு ஏற்கெனவே கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai