பரமக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சம்

பரமக்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையில் மின் விளக்குகள் பொருத்தாததால்

பரமக்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையில் மின் விளக்குகள் பொருத்தாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். 
  பரமக்குடியில் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் பாலன் நகர், பொன்னையாபுரம், சுந்தர்ராஜபட்டிணம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு வாசிகள் 2 கி.மீ தூரம் மேம்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் அங்கு சுரங்கப்பாதை அமைத்தது. அதில் நீண்ட நாள்களாக நகராட்சி பகுதியிலிருந்து இணைப்புச்சாலை அமைக்காமல் இருந்து வந்தது. 
 இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் நகராட்சி பகுதியுடன் இணைப்புச்சாலை ஏற்படுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அச்சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்டது. இப்பாதையில் மின் விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் இருள் நிறைந்து அவ்வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்புள்ளதாகவும், அப்பகுதி மக்களின் நலன் கருதி அச்சுரங்கப்பாதையில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com