மீன்பிடி தடைக்காலத்துக்கு நிவாரணம் வழங்கவில்லை: ஆட்சியரிடம் மீனவர்கள் புகார்

மீன் பிடி தடைக் காலத்துக்குரிய நிவாரணம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என முத்துப்பேட்டைப்

மீன் பிடி தடைக் காலத்துக்குரிய நிவாரணம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என முத்துப்பேட்டைப் பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருதப்பட்டு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன்பிடிக்காத காலத்தில் மீனவர்களுக்கு  நிவாரணமாக குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத்தை மீன்வளத்துறை மூலம் அரசு வழங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் மண்டபம், ராமேசுவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளர்ச்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், மீன்பிடி தடைக்கால உதவித்தொகை வழங்கவில்லை என முத்துப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இக்பால், பைசுல்ரஹ்மான், கபீர், சுல்தான் கருணை, செய்யதஅலி, ஜபருல்லாகான், சீனி செய்யதலி ஆகியோர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். 
மனுவில், ராமநாதபுரம் முத்துப்பேட்டை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளோம். தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம்  நடப்பு ஆண்டிற்கான மீன்பிடி தடை காலத்துக்கு அரசு வழங்கும் உதவித்தொகை தலா ரூ. 5 ஆயிரம் இதுவரை எங்கள் கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு வழங்கவில்லை. மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், அனைத்து ஆவணங்களுடன் மீன்வளத் துறை அதிகாரியை சந்தித்து மனு அளித்தும் உதவித் தொகை இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே மீன்பிடி தடைகால இடைக்கால உதவித் தொகையை பெற்றுத் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com