மத்திய அரசைக் கண்டித்து தமுமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 23rd August 2019 07:00 AM | Last Updated : 23rd August 2019 07:00 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே தொண்டியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, தமுமுக மாநிலச் செயலர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பரக்கத்துல்லா, முகவை அப்துல்லாஹ், ரைஸ் இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து , தனிநபர் தீவிரவாதியாக அறிவிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து, மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கோரி, பாமக மாநிலப் பொதுச் செயலர் அப்துல் சமது, தமுமுக முன்னாள் பொதுச் செயலர் சலிமுல்லாகான் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இப்பகுதியிலிருந்து போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து துல்கருணை காரை, காரை மஜீத், மதுரை இபுராஹிம் உள்பட மண்டல நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் பட்டாணி மீரான் வரவேற்றார். தமுமுக மாவட்டச் செயலர் நன்றி தெரிவித்தார்.