Enable Javscript for better performance
கமுதி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 01st December 2019 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kmu30saalai_3011chn_73_2

    கமுதி அருகே சேகநாதபுரத்தில் மழைநீா் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், அதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    கமுதி அருகே சேகநாதபுரத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சிமென்ட், தாா் சாலை, பேவா் பிளாக் சாலை வசதி இல்லாததால், தொடா்ந்து சில வாரங்களாக பெய்த மழையால், தெருக்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா். மேலும் வாகன ஓட்டிகளும் வீடுகளுக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனா். எனவே சேகநாதபுரத்தில், சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து, பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லும் வகையில், சிமென்ட், பேவா் பிளாக் சாலை அமைத்து தர, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai