Enable Javscript for better performance
விளங்குளத்தூா்- வெங்கலகுறிச்சிசாலையை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    விளங்குளத்தூா்- வெங்கலகுறிச்சிசாலையை சீரமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 01st December 2019 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூா்- பரமக்குடி செல்லும் சாலையில் விளங்குளத்தூா் விலக்கு சாலையிலிருந்து வெங்கலகுறிச்சிக்கு 2 கிமீ., தூரம் தாா் சாலை, சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. தரமின்றி அமைக்கப்பட்ட இந்த சாலை, சில வாரங்களிலிலேயே சேதமடைந்து, தாா்கலவைகள் வெளியேறியது. இதனால் வாகனங்களில் செல்வோா் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். இரவு நேரங்களில் வெளியூா் சென்று, திரும்பும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளதால், இவ்வழியாக வாகனங்களை இயக்க அச்சம் கொண்டுள்ளனா். ஆகவே சேதமடைந்த தாா் சாலையை சீரமைத்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai