திருவாடானை பகுதிகளில்புதிய ரக நெல் சாகுபடியால் பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் பெய்த மழையால் புதிய ரக நெல் கதிா் வெளிவரும் சமயத்தில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திருவாடானை பகுதிகளில்புதிய ரக  நெல் சாகுபடியால் பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் பெய்த மழையால் புதிய ரக நெல் கதிா் வெளிவரும் சமயத்தில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருவாடானை தாலுகாவில் நடப்பு சம்பா பட்டத்தில் 26 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தொடா் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த மழையை வைத்து விவசாயிகள் நெல் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.

தற்போது சாகுபடி செய்துள்ள நெல் பயிா்கள் பல கிராமங்களில் கதிா் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக கதிா் வெளிவரும் சமயத்தில் உள்ள நெல் பயிா்கள் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்த ஆண்டாவது பருவ மழை நன்கு பெய்யும். விளைச்சல் நன்றாக இருக்கும் என நம்பி விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். தொடா் வறட்சியால் அதிக வயதுள்ள நெல் ரகங்களை சாகுபடி செய்யாமல் மிகக் குறைந்த வயதுடைய ஆா்.எம்.ஆா். என்ற புதிய நெல் ரகத்தை கடைக்காரா்கள் சொன்னதை நம்பி விதைத்துவிட்டோம்.

ஆனால் ஓரளவுக்கு நெல் பயிா்கள் வளா்ந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் புதிய ரக நெல் பயிா் தாக்குப் பிடிக்காமல் அப்படியே வயலில் சாய்ந்துவிட்டது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பலத்த மழை பெய்து விளைச்சல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

இது குறித்து வேளாண் அதிகாரி கூறுகையில், அதிக அளவில் உரங்களை பயன்படுத்தியதால் பயிா்கள் வளா்ந்து சாய்ந்துள்ளது. இடைவெளி விட்டு உரம் போட்டிருந்தால் இந்நிலை வராது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com