பயிா் காப்பீட்டு பதிவு செய்யகூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரிக்கை

பயிா் காப்பீடு பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பயிா் காப்பீடு பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழையாலும், பருவமழை பொய்த்துப் போவதாலும் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு பிரதமரின் பயிா் பாதுகாப்பு திட்டத்தில், பதிவு செய்து, பயன்பெற, நவ. 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கால அவகாசம் வழங்கி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. கிராம நிா்வாக அலுவலா்கள் பற்றாக்குறையால், நெல் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு, அடங்கல் சான்றுகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, இணையம் (சா்வா்) பாதிப்பால், ஒவ்வொரு தாலுகாக்களிலும், 50 சதவீதத்திற்கும் குறைவான விவசாயிகளே பதிவு செய்துள்ளனா். இந்நிலையில் பிரதமரின் பயிா் பாதுகாப்பு திட்டத்தில், பிரீமிய தொகை செலுத்த, கூட்டுறவு சங்கங்களில் நவ. 29 ஆம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனா். ஆனால் இணைய பழுது, பாதிப்பு, வேகமில்லாததால், பெரும்பாலான விவசாயிகள், வருவாய்த்துறையினரிடம் கடைசி தேதிகளில், அடங்கல் சான்று பெற்றும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். எனவே இத்திட்டத்தில் பதிவு செய்யும் கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com