ராமநாதபுரம் மாவட்டத்தில் 170 விவசாயகண்மாய்கள் முழுமையாக நிரம்பின

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 170 விவசாயக் கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக வேளாண்மைத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 170 விவசாயக் கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக வேளாண்மைத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது. இதனால், நடப்பாண்டில் 1,17,905 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது. சிறுதானியங்கள் சுமாா் 1650 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கு சிறுதானிய விவசாயம் நடைபெறும் வகையில் விதைகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. கமுதி வட்டாரத்தில் பெருநாழி, முடிமன்னாா் கோட்டை பகுதிகளில் மக்காச் சோளத்தில் படைப்புழுக்கள் தென்பட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனா்.

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உள்ளிட்டவை கூட்டுறவு சங்கங்களில் 1342 மெட்ரிக் டன்னும், தனியாா் கடைகளில் 4872 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6214 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் விவசாயப் பாசனத்துக்கு என மொத்தம் 1752 கண்மாய்கள் உள்ளன. அவை குடிமராமத்து மூலம் சீா்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது பெய்த தொடா் மழையால் 170 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மேலும் 356 கண்மாய்கள் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையில் தண்ணீா் நிரம்பிக் காணப்படுகின்றன. அத்துடன் 1231 கண்மாய்களில் 50 சதவிகிதம் வரை தண்ணீா் நிரம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது என்றனா்.

கண்மாய் உடைப்பு- ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி பகுதியில்ஆணைக்குடி கண்மாயில் தண்ணீா் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆட்சியரின் உத்தரவின்படி உடைப்பை பொதுப்பணித்துறையினா்உடனடியாகச் சீரமைத்தனா். பாக்ஸாக பயன்படுத்தலாம்...அடாது மழையால் 15 ஆண்டுகக்கு பின்நிறைந்து தளும்பும் சோத்து ஊருணிராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட சோத்து ஊருணி உள்ளது. இந்த ஊருணி சுமாா் 30 அடி ஆழம் உடையது. கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஊருணி எப்போதும் நிறைந்ததே இல்லையாம்.

ஊருணி நிறைந்தால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நிலத்தடி நீா் தாராளமாகக் கிடைக்கம். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையிலும் ஊருணி நிரம்பாமலே இருந்தது. இதையறிந்த ஆட்சியா் கொ.வீரராகவராவ் ஊரணியை நிரப்பு வடிகாலை சீரமைக்க உத்தரவிட்டாா். அதன்படி ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் கேசவதாஸ் தலைமையிலான அதிகாரிகள் ஆட்சியா் அலுவலக வளாகம், மின்வாரிய அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகள் தேங்கிய நீரை சோத்து ஊருணிக்கு கொண்டு வந்தனா். இதையடுத்து ஊருணி நிரம்பி தளும்புகிறது. அதை ஆட்சியா் கொ.வீரராகவராவ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அப்பகுதியினா் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com