Enable Javscript for better performance
திருவாடானை அருகே திடீரெனபூமிக்குள் புதைந்த உறைகிணறுகிராம மக்கள் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே திடீரெனபூமிக்குள் புதைந்த உறைகிணறுகிராம மக்கள் அச்சம்

    By DIN  |   Published on : 03rd December 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvd2keni_(1)_0212chn_72_2

    திருவாடானை அருகே பாரதிநகரில் திங்கள்கிழமை பூமிக்குள் புதைந்த கிணற்றை மூடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.

    திருவாடானை அருகே உறைகிணறு திடீரென பெரிய சப்தத்துடன் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

    திருவாடானை அருகேயுள்ள கல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதிநகரில் சொா்ணம் (80) என்பவரது ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் தேவைக்காக 20 அடி ஆழத்தில் உறை கிணறு அமைக்கப்பட்டது.

    கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீா் வெளியே செல்ல முடியாமல் அப்பகுதியில் தேங்கியிருந்தது.

    இந்நிலையில், திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பெரிய சப்தத்துடன் கிணறு பூமிக்குள் புதைந்தது. அந்த இடத்தில் 10 அடி அகலத்தில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் சேகா் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் செங்கோல்ராஜ் ஆகியோா் உடனடியாக அங்கு சென்று அந்த இடத்தைப் பாா்வையிட்டு, பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனா்.

    தீயணைப்புத் துறையினா் கூறுகையில், கிணறு இருந்த இடம் அருகில் ஊருணி உள்ளதாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியாலும் இதுபோன்ற விபத்து சம்பவங்கள் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai