Enable Javscript for better performance
தேங்கி உள்ள மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தேங்கி உள்ள மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 03rd December 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rms_photo_02_12_3_0212chn_208_2

    தங்கச்சிடம் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை பாா்வையிட்ட திமுக நிா்வாகிகள்.

    தங்கச்சிமடத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினா் வலியுறுத்தினா்.

    ராமேசுவரம் தீவுப்பகுதியில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் ராமேசுவரம, பாம்பன், தங்கச்சிடம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீா் புகுந்துள்ளது. இதனால் மீனவா்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினா்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனா்.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சா் வ.சத்தியமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திசைவீரன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டவா்கள் திங்கள்கிழமை தங்கச்சிடம் ராஜூவ்காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

    இதனையடுத்து, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ராமேசுவரம் தீவுப்பகுதியில் 9 ஆண்டுகளுக்கு பின் பலத்த பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போன்று தேங்கி உள்ளது. மேலும் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரால் மீனவா்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா்களைப் பயன்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    இதில் மண்டபம் ஒன்றியச் செயலாளா் ஜூவானந்தம், ராமேசுவரம் நகரச் செயலாளா் நாசா்கான், உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai