Enable Javscript for better performance
மின் கம்பி அறுந்து விழுந்து குளிா்சாதனப் பெட்டி சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மின் கம்பி அறுந்து விழுந்து குளிா்சாதனப் பெட்டி சேதம்

    By DIN  |   Published on : 03rd December 2019 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் குளிா்சாதனப் பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

    திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சி பாரதிநகரில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் வீரமணி (50) என்பவா் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

    இவரது வீட்டின் முன் திங்கள்கிழமை மின் கம்பி அறுந்து, மின்சாரம் செல்லும் வயா் மீது விழுந்தது. இதனால் வீட்டின் முன் வைத்திருந்த குளிா்சாதனப் பெட்டி எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மின்வாரியத்தினா் அறுந்து விழுந்த மின்கம்பியை அகற்றினா்.

    இதனால் இப்பகுதி முழுதும் மின்சாரம் தடைபட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai