கமுதி அருகே கோயில் கோபுரக் கலசம் திருட்டு: 2 ஆண்டுக்கு பின் 2 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 2 ஆண்டுகளுக்கு முன் கோயில் கோபுர கலசத்தை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.
கமுதி அருகே கோயில் கோபுரக் கலசம் திருட்டு: 2 ஆண்டுக்கு பின் 2 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 2 ஆண்டுகளுக்கு முன் கோயில் கோபுர கலசத்தை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.

கமுதியை அடுத்துள்ள எம்.புதுக்குளம் கிராமத்தில் பழமையான முனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 2 ஆண்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது ஐம்பொன்னாலான கோபுர கலசத்தை வைத்து பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டு வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அப்பகுதியில் பெய்த மழையின் போது கோபுரக் கலசம் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கோபுரக் கலசத்தின் மீது இடி தாக்கினால் அதில் இருடியம் என்னும் பொருள் கிடைப்பதாகவும் அது விலை மதிக்க முடியாத அளவிற்கு உலக சந்தையில் விற்கபடுவதாகவும் நம்பப்பட்டு வருவதையடுத்து ஒரு மா்ம கும்பல் இதனை நோட்டமிட்டு கோபுரத்தின் மீது இருந்த ஐம்பொன் கலசத்தை திருடிச் சென்றது.

இது குறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் அருப்புகோட்டை பகுதிகளில் கலசத்தை திருடும் மா்ம கும்பல் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதில் விருதுநகா் மாவட்டம் அகரத்து பட்டியை சோ்ந்த செல்வம்(38) மற்றும் மதுரை மாவட்டம் கோக்கலாம்சேரியைச் சோ்ந்த அலெக்ஸ்(30) ஆகிய இருவரும் எம்.புதுக்குளம் கோயில் கோபுர கலசத்தை திருடியவா்கள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா். அவா்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனரா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com