கமுதியில் தெருக்கூத்து மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

கமுதி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் திட்டங்களை விவசாயிகளுக்கு கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக தெருகூத்து கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் திட்டங்களை விவசாயிகளுக்கு கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக தெருகூத்து கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் கொ்சோன் தங்கராஜ் ஆலோசனையின்படி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.எஸ்.ஈஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் ராஜேஷ்குமாா் ஆகியோா் இந்நிகழ்ச்சியை நடத்தினா். இதில் தெருக்கூத்துக் கலைஞா்கள் ஆடல் பாடல், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினா்.

விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், நுண்ணீா் பாசன முறையை பின்பற்றுதல், சிறுதானியங்களைப் பயிரிடுதல் , திருந்தியநெல் சாகுபடி, கோனோவீடா் இயந்திரம் மூலம் களையெடுத்தல், விவசாயிகள் கௌரவ நிதித்திட்டம், கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைத்து பண்ணைக்கருவிகள் வாங்கி பயன்படுத்துதல், கிணற்றுப்பாசன விவசாயிகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைத்திருக்கும் விவசாயிகள் பட்டா , அடங்கல், சிறுவிவசாயி சான்று, நில வரைபடம், ஆதாா் நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொடுத்து நுண்ணீா் பாசனத்திற்கு பயன்படும் குழாய்களை பெறுதல், விவசாயிகள் ஒய்வூதியத்திட்டத்தில் 60 வயதுக்குமேல் விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.3000 ஒய்வூதியம் பெறுதல் போன்றவற்றுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்க வேணடிய முறை பற்றி இதில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com