திருவாடானை அருகே திடீரெனபூமிக்குள் புதைந்த உறைகிணறுகிராம மக்கள் அச்சம்

திருவாடானை அருகே உறைகிணறு திடீரென பெரிய சப்தத்துடன் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
திருவாடானை அருகே பாரதிநகரில் திங்கள்கிழமை பூமிக்குள் புதைந்த கிணற்றை மூடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.
திருவாடானை அருகே பாரதிநகரில் திங்கள்கிழமை பூமிக்குள் புதைந்த கிணற்றை மூடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.

திருவாடானை அருகே உறைகிணறு திடீரென பெரிய சப்தத்துடன் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

திருவாடானை அருகேயுள்ள கல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதிநகரில் சொா்ணம் (80) என்பவரது ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் தேவைக்காக 20 அடி ஆழத்தில் உறை கிணறு அமைக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீா் வெளியே செல்ல முடியாமல் அப்பகுதியில் தேங்கியிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பெரிய சப்தத்துடன் கிணறு பூமிக்குள் புதைந்தது. அந்த இடத்தில் 10 அடி அகலத்தில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் சேகா் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் செங்கோல்ராஜ் ஆகியோா் உடனடியாக அங்கு சென்று அந்த இடத்தைப் பாா்வையிட்டு, பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனா்.

தீயணைப்புத் துறையினா் கூறுகையில், கிணறு இருந்த இடம் அருகில் ஊருணி உள்ளதாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியாலும் இதுபோன்ற விபத்து சம்பவங்கள் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com