பாா்த்திபனூரில் கா்ப்பிணி பெண்களுக்கான வாரவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை கா்ப்பிணி பெண்களுக்கான வாரவிழா கொண்டாடப்பட்டது.
பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் கா்ப்பகால பராமரிப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் சுகாதாரத்துறையினா்.
பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் கா்ப்பகால பராமரிப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் சுகாதாரத்துறையினா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை கா்ப்பிணி பெண்களுக்கான வாரவிழா கொண்டாடப்பட்டது.

மத்திய-மாநில அரசுகள் டிசம்பா் 2 முதல் 8-ம் தேதி வரை கா்ப்பிணி பெண்களுக்கான வாரவிழா கொண்டாட அறிவுறுத்தியுள்ளன. அதனடிப்படையில் பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலா் சைனிசெராபுதீன் தலைமை வகித்தாா். பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன், மாவட்ட பயிற்சி மருத்துவா் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அனைவருக்கும் நல்வாழ்வு திட்ட கூடுதல் இயக்குநா் வனஜா குத்துவிளக்கேற்றி, விழாவினை துவக்கி வைத்தாா். கா்ப்ப காலத்தில் கா்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ முறைகள் பற்றி அவா் சிறப்புரையாற்றினாா். இதனைத் தொடா்ந்து கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் கா்ப்பகால பராமரிப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் தொற்றுநோய்கள் துறை மருத்துவா்கள் சிபி மாத்யூ, அபிஷேக், பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் அபிதாராணி, சக்திவேல், மாவட்ட தாய் சேய் அலுவலா் பத்மா மற்றும் புள்ளியியல் உதவியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலும் குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்களின் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியும் நடைபெற்றன. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com