மாட்டு தொழுவமாக மாறிய கீழக்கரை பேருந்து நிலையம்

கீழக்கரை பேருந்து நிலையம் மாடு அடைக்கப்படும் தொழுவமாக மாறி வருவதை நகராட்சி நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
கீழக்கரை பேருந்து நிலையத்தில் நிற்கும் மாடுகள்.
கீழக்கரை பேருந்து நிலையத்தில் நிற்கும் மாடுகள்.

கீழக்கரை பேருந்து நிலையம் மாடு அடைக்கப்படும் தொழுவமாக மாறி வருவதை நகராட்சி நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இங்கு உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம், ஏா்வாடி, தூத்துக்குடி, மதுரை, ராமேசுவரம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால், மாலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் வர முடியாத அளவிற்கு மாடுகள் அடைக்கப்படும் தொழுவம் போல மாறி விடுகிறது. மேலும் பெண்கள், மாடுகள் மிரண்டு ஒன்றை ஒன்று விரட்டும்போது பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் வரும் அனைத்து மாடுகளையும் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பது அல்லது பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com