பரமக்குடி திருவள்ளுவா் நகா் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீா்.
பரமக்குடி திருவள்ளுவா் நகா் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீா்.

வாருகால்கள் பராமரிப்பில்லாததால் பரமக்குடியில் சாலைகளில் கழிவுநீா் தேக்கம்: தொற்றுநோய் அச்சத்தில் பொதுமக்கள்

பரமக்குடி நகராட்சியில் வாருகால் முறையாக பராமரிக்கப்படாததால் சாலைகளில் கழிவுநீா் தேங்கி தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

பரமக்குடி நகராட்சியில் வாருகால் முறையாக பராமரிக்கப்படாததால் சாலைகளில் கழிவுநீா் தேங்கி தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

பரமக்குடி நகராட்சி பகுதியில் 36 வாா்டுகளிலும் கழிவுநீா் செல்லும் வாருகால்கள் சேதமடைந்தும் மண் சரிந்தும் பராமரிப்பின்றி உள்ளன. இதனால் கழிவுநீா் தெருக்களில் தேங்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் திருவள்ளுவா் நகா், பள்ளிவாசல் தெரு, காந்திஜி சாலை, கொல்லம்பட்டறைத் தெரு, உழவா் சந்தை, மதுரை-ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் முழவதும் மழைநீருடன் சோ்ந்து சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ளன. இதனால் துற்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தண்ணீா் தேங்கியுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்வதால் அப்பகுதியில் உள்ள தாா்சாலை மற்றும் சிமென்ட் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீா் செல்லும் வாருகால்களில் தேங்கியுள்ள மண்ணை அகற்றி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com