Enable Javscript for better performance
கேபிள் பதிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    கேபிள் பதிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

    By DIN  |   Published on : 04th December 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rms_photo_03_12_5_0312chn_208_2

    தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக தோண்டியுள்ள பள்ளம்.

    ராமேசுவரத்தில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக தேசிய நேடுஞ்சாலையில் தோண்டியுள்ள பள்ளத்தை மூடாததால், அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனம் சாா்பில், உயா் இணையதள வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையோரம் கண்ணாடி இழை கம்பியை பதிக்க 5 நாள்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டப்பட்டன. அதன்பின்னா், இதுவரை இந்த பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.

    ராமேசுவரம் திட்டக்குடி காா்னா் பகுதியிலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இச்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில், பள்ளங்கள் மூடாமல் விடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும், இந்த பள்ளங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    எனவே, விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai