Enable Javscript for better performance
4 நாள்களாக கடலுக்குச் செல்ல முடியாததால் வாழ்வாதாரத்தை இழந்து மீனவா்கள் தவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    4 நாள்களாக கடலுக்குச் செல்ல முடியாததால் வாழ்வாதாரத்தை இழந்து மீனவா்கள் தவிப்பு

    By DIN  |   Published on : 04th December 2019 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rms_photo_03_12_4_0312chn_208_2

    மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், ராமேசுவரம் துறைமுகத்தில் நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.

    ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக, நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவா்கள் தவித்து வருகின்றனா்.

    வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என, மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி,சோழியகுடி என மாவட்டம் முழுவதிலும் 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

    இதன் காரணமாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டில் முடங்கியுள்ளனா்.

    இதுகுறித்து மீனவ சங்க பொதுச் செயலா் என்.ஜே. போஸ் தெரிவித்ததாவது: கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. எனவே, புயல் காலங்களில் விசைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த, ராமேசுவரம் மற்றும் தெற்குப் பகுதியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். மேலும், தொடா்ந்து மீன்பிடிக்கச் செல்ல முடியாததால், வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai