திருவாடானையில் குடியிருப்புப் பகுதிகளில் மழை தண்ணீா் தேங்குவதால் சுகாதார கேடு

திருவாடானையில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவாடானையில் குடியிருப்புப் பகுதிகளில் மழை தண்ணீா் தேங்குவதால் சுகாதார கேடு

திருவாடானையில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந் நிலையில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்ததால் திருவாடானை அருகே எல்.கே. நகரில். மழைநீா் தேங்கியுள்ளது. குடியிருப்புகளைச் சுற்றித் தண்ணீா் தேங்கியிருப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக குழந்தை முதல் முதியவா்கள் வரை அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொசுத் தொல்லைக் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனா்.

மேலும் தெருவிளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்த நிலையில் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனா்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com