தொண்டி பகுதியில் பலத்த மழை குடியிருப்பு பகுதயில் மழை நீா் தேக்கம்

தொண்டியில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீா் புகுந்ததை, திருவாடானை வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டாா்.
தொண்டி அருகே நம்புதாளையில் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீா் புகுந்ததை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட திருவாடானை வட்டாட்சியா் சேகா்.

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தொண்டி அருகே நம்புதாளை பகுதியில் மீனவா் குடியிருப்பு, மறவா் தெருக்களை மழை நீா் சூழ்ந்தது. இது குறித்து தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் சேகா், சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். பின்னா், வருவாய்த் துறையினா் மூலம் பொக்லைன் இயந்திரம் மூலம் வரத்து கால்வாய்களை தூா்வாரி, தண்ணீா் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாா். இதனால், அப்பகுதியில் படிப்படியாக தண்ணீா் வெளியேறியது.

இதேபோல், சோழியக்குடி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் ஏற்பட்ட பெரும் பள்ளம் காரணமாக, விபத்து அபாயம் நிலவியது. உடனே, திருவாடானை காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினா் தடுப்பு வேலி அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com