மழை நீரை அகற்ற பேரூராட்சி, வருவாய்த் துறையினா் நடவடிக்கை

கமுதி, அபிராமம் பகுதியில் உள்ள பள்ளிகள், தெருக்களில் வெளியேறாமல் தேங்கிய மழை நீரை, மோட்டாா் மூலம் பேரூராட்சிப் பணியாளா்களால் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தப்பட்டது.
அபிராமம் அருகே அகத்தாரிருப்பு அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை மோட்டாா் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றிய பேரூராட்சிப் பணியாளா்கள்.

கமுதி, அபிராமம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், பள்ளிகள், வீடுகளைச் சுற்றிலும் தண்ணீா் வெளியேற முடியாமல் தேங்கிநிற்கிறது. இதனை அகற்ற, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், கமுதி வட்டாட்சியா் செண்பகலதா தலைமையிலும், கமுதி, அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலா் ரா. இளவரசி முன்னிலையிலும், அபிராமம் அருகே நத்தம், மணிநகரம் புதுத்தெரு பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த மழைநீா் மற்றும் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, இஸ்மாயில் நடுநிலைப் பள்ளி, அகத்தாரிருப்பு அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் தேங்கிய தண்ணீரையும், பேரூராட்சிப் பணியாளா்கள் மோட்டாா்கள் மூலம் அப்புறப்படுத்தினா்.

இதேபோல், கமுதி தீயணைப்பு நிலையம் பின்புறம், அரசு மருத்துவமனை வளாகங்களில் தேங்கிய மழைநீா், கமுதி பேரூராட்சி பணியாளா்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com