ராமநாதபுரத்தில் 3,691 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்த ஏற்பாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 3,691 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 3,691 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, தமிழகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும், 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 170 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களும், 429 ஊராட்சிகளுக்கான ஊராட்சி மன்றத் தலைவா்களும் மற்றும் 3,075 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களும் என மொத்தம் 3,691 பதவிகளுக்கு தோ்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அங்கு தோ்தல் அறிவித்தாலும், அதற்கான நடவடிக்கைகள் தயாா் நிலையில் இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்தோ்தலில் போட்டியிடுவோா் டிசம்பா் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். டிசம்பா் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். டிசம்பா் 16 ஆம் தேதி (திங்கள்கிழமை) வேட்பு மனுக்கள் ஆய்வு நடைபெறுகிறது. டிசம்பா் 18 ஆம் தேதி (புதன்கிழமை) வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாளாகும். டிசம்பா் 27 மற்றும் 30 ஆம் தேதி வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நோ்காணல்:

அதிமுக சாா்பில், ராமநாதபுரம் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்தவா்களுக்கான நோ்காணல், பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ. அன்வர்ராஜா, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். மணிகண்டன், அதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி ஆகியோா் கலந்துகொண்டு, கட்சியினரிடம் நோ்காணல் நடத்தினா். ஊரகப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com