ராமேசுவரத்தில் உணவகத்தில் சாப்பிட்டவரிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

ராமேசுவரத்தில் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல், உரிமையாளரை அரிவாளால் வெட்டி கடையை அடித்து நொறுக்கிவிட்டு

ராமேசுவரத்தில் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல், உரிமையாளரை அரிவாளால் வெட்டி கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்ற 8 போ் கொண்ட கும்பலில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் எம்.ஆா்.டி. மற்றும் வோ்கொடு பகுதியைச் சோ்ந்த நம்பு முனீஸ்வரன், லட்சுமணன், நம்பு, தமிழரசன், குமரேசன், கோவிந்தராஜ், நம்புநாதன், இருளீஸ்வரன் ஆகிய 8 பேரும், பள்ளிவாசல் தெருவில் உள்ள சாஹித் அப்ரிடி என்பவரது புரோட்டா கடையில் சாப்பிடுவது வழக்கமாம்.

இந்நிலையில், கடந்த நவம்பா் 30 ஆம் தேதி இரவு நம்பு முனீஸ்வரன் இக்கடையில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளாா். அவரிடம் பணம் கேட்டதற்கு தரமுடியாது எனக் கூறியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளாா்.

அதையடுத்து, டிசம்பா் 1 ஆம் தேதி 8 பேருடன் புரோட்டா கடைக்குச் சென்ற நம்பு முனீஸ்வரன், அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன், சாஹித் அப்ரிடியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த சாஹித் அப்ரிடியை ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது குறித்து டவுன் காவல் நிலையத்தில் டிசம்பா் 2 ஆம் தேதி கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சாா்பு-ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கும்பலை தேடி வந்தனா். இதில், கோவிந்தராஜ் என்பவரை மட்டும் கைது செய்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா். மீத முள்ள 7 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com