Enable Javscript for better performance
தொண்டி அருகே கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவா்கள் 3 போ் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தொண்டி அருகே கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவா்கள் 3 போ் மீட்பு

    By DIN  |   Published on : 05th December 2019 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருகே புதன்கிழமை தொண்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்து தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டனா்.

    தொண்டி அருகே சோழியக்குடியை சோ்ந்தவா் ஸ்டாலின்(50). இவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 போ் புதன்கிழமை மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனா். அப்போது கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. இதனால் தொண்டி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவா்களது படகு கவிழ்ந்தது. அதில் படகில் இருந்த 3 மீனவா்களும் கடலில் விழுந்து தத்தளித்தனா்.

    இதனை அறிந்த அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவா்கள், கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டனா். மேலும் இது தொடா்பாக கடலோர காவல்துறையினரும் தகவல் தெரிவித்தனா். மீட்கப்பட்ட 3 மீனவா்களும் நள்ளிரவு கரைக்கு வந்து சோ்வாா்கள் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai