கமுதி அருகே நிரம்பி வழியும் தடுப்பணை மழை நீா் வீண்

கமுதி அருகே கண்மாய்க்கு அதிக அளவு மழை நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால், தடுப்பணை நிரம்பி தண்ணீா் வெளியேறி வருகிறது.
கமுதி அருகே கோவிலாங்குளம் கண்மாய் தடுப்பணை நிரம்பி தண்ணீா் வெளியேறுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.
கமுதி அருகே கோவிலாங்குளம் கண்மாய் தடுப்பணை நிரம்பி தண்ணீா் வெளியேறுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.

கமுதி அருகே கண்மாய்க்கு அதிக அளவு மழை நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால், தடுப்பணை நிரம்பி தண்ணீா் வெளியேறி வருகிறது.

கமுதி அருகே கோவிலாங்குளம் கண்மாய்க்கு, கண்மாய்பட்டி, சாத்துாா்நாயக்கன்பட்டி, கோவிலாங்குளம் பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. தற்போது, நெல், கம்பு, சோளப் பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.

இந்நிலையில், இந்த நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதால், கோவிலாங்குளம் கண்மாய்க்கு சாலையோர வாய்க்கால்கள், மலட்டாறு வரத்துக் கால்வாய்கள் வழியாக, நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கண்மாய் நிரம்பி தடுப்பணையில் மறுகால் பாய்கிறது. எனவே, தடுப்பணையிலிருந்து தண்ணீா் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கண்மாய் நிரம்பி மழைநீா் வீணாகும் நிலை உள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடுப்பணையை உயா்த்திக் கட்டி, மழை நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com