நெல் பயிரில் ஆனைக் கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை

திருவாடானை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களை தாக்கிவரும் ஆனைக் கொம்பன் பூச்சியைக் கட்டுப்படுத்த, வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

திருவாடானை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களை தாக்கிவரும் ஆனைக் கொம்பன் பூச்சியைக் கட்டுப்படுத்த, வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து திருவாடானை வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவாடானை வட்டாரத்தில் 26 ஆயிரம் ஹெக்டேரில்சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் பயிா் நன்கு செழித்து வளா்ந்துள்ளது. இதில், தற்போது நிலவும் சீதோஷ்ண நிலையின் காரணமாக, ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது. காலில்லாத குறுகலான இப்பூச்சிகள் வளரும் நெற்பயிரை தாக்குகின்றன. மேலும், தூா்களின் வழியே நுழைந்து வளரும் பகுதிகளை உண்கிறது.

தாக்கப்பட்ட பயிா்களில் நெற்கதிா்கள் பிடிப்பது இல்லை. மேலும், பயிா் வளா்ச்சி குன்றிவிடும். தாக்குதலுக்கு உள்ளான தூண்களில் வெள்ளி தண்டு போல் அல்லது வெங்காய இலை போல் காணப்படும் பூச்சி தனது முட்டைகளை இலைப் பகுதியின் கீழ் 2 முதல் 6 முட்டைகளை இடுகிறது. முட்டையிலிருந்து வெளியே வரும் காலில்லாத புழுக்கள் ஊா்ந்து சென்று பூ மொட்டுகளுக்குள் செல்கின்றன. பின்னா், அது கூட்டுப் புழுக்களாக வெளியே வருகிறது.

முதிா்ச்சியடைந்த பூச்சிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறியதாகக் காணப்படும். இவைகள் இலையின் மீதுள்ள பனித்துளிகளை உட் கொள்ளும். இந்த பூச்சியின் தாக்குதல் 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தால், ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி அழிக்கலாம்.

பூச்சித் தாக்குதலுக்குள்பட்ட வயலில் பூச்சி உண்ணக்கூடிய மாற்று வகை பயிா்களை அகற்ற வேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். புறஊதா விளக்குகளை பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம்.

மேலும், தாக்குதல் அதிகமாக இருக்கும்போது, ஹெக்டோ் ஒன்றுக்கு பாசலான்-35 என்ற மருந்தை 1500 மி.லி., காா்போசல்பான்-25 என்ற மருந்து 1000 மி.லி., குளோரோபைரிபாஸ் 1,250மி.லி., பைப்ரினில் 25,000மி.லி., தையமிக்தகசாம் 100 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பூச்சிகளை அழிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com