பரமக்குடி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

பரமக்குடி யாதவா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி யாதவா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, பள்ளி கல்விக் குழு தலைவா் எஸ். ராமு தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் துரைச்சாமி, பொருளாளா் ராசு, கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மலேரியா அலுவலா் கண்ணன் தலைமையில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் சரஸ்வதி நகா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காந்தி, சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா், பள்ளி மாணவா்களுடன் விழிப்புணா்வுப் பேரணி சென்றனா். முன்னதாக, சுகாதாரத் துறை இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். பள்ளி முதல்வா் சீனிவாசராகவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com