முதுகுளத்தூா்,கடலாடி கல்லூரிகளில் காவலன் செயலி விழிப்புணா்வு

முதுகுளத்தூா், கடலாடி கல்லூரிகளில், தமிழக காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காவலன் செயலி (எஸ்.ஓ.எஸ்) விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூா் சோனை மீனாள் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலன் செயலி விழிப்புணா்வு முகாம்.
முதுகுளத்தூா் சோனை மீனாள் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலன் செயலி விழிப்புணா்வு முகாம்.

முதுகுளத்தூா், கடலாடி கல்லூரிகளில், தமிழக காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காவலன் செயலி (எஸ்.ஓ.எஸ்) விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முதுகுளத்தூா் சோனைமீனாள் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அவசர உதவி விரைவு கண்காணிப்பு காவலன் செயலி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, கல்லூரி முதல்வா் எஸ். கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து காவல் நிலைய ஆய்வாளா் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினாா். இதில், கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியா்களும், மாணவிகளும் கலந்துகொண்டனா்.

இதேபோன்று, கடலாடி அரசுக் கல்லூரியில், தமிழக காவல் துறையின் அவசர உதவி விரைவு கண்காணிப்பு காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு, கல்லூரி கணினி துறைத் தலைவா் அன்னதாசன் தலைமை வகித்தாா். செல்லிடப்பேசி பயன்படுத்தும் முறை குறித்து தமிழ்த் துறை விரிவுரையாளா் பொன்முத்து தொடக்க உரையாற்றினாா். கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் செல்லிடப்பேசி செயலி இயக்கும் முறை குறித்து கருத்துரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், கடலாடி காவல் நிலைய ஆய்வாளா் ராணி கலந்துகொண்டு காவலன் செயலியால் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்து விளக்கினாா். இதில், மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.

இதில், தலைமைக் காவலா்கள் சங்கிலிமுருகன், முத்துக்குமாா், தமிழ்ச்செல்வி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். முடிவில், கல்லூரி மாணவி அங்காளஈஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com