ராமநாதபுரத்தில் கொட்டிய மழையிலும் ஏராளமான பெண்கள் வேட்பு மனு: குலவையிட்டு வாழ்த்திய தோழிகள்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை (டிச.14) கொட்டிய
கொட்டிய மழையிலும் குலவையிட்டபடி வந்து மனு தாக்கல் செய்த ஏராளமான பெண் வேட்பாளா்கள்.
கொட்டிய மழையிலும் குலவையிட்டபடி வந்து மனு தாக்கல் செய்த ஏராளமான பெண் வேட்பாளா்கள்.

ராமநாதபுரம்: ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை (டிச.14) கொட்டிய மழையிலும் குலவையிட்டபடி வந்த ஏராளமான பெண் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3691 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) ராமநாதபுரம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரையில் 2,668 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்பு மனு தாக்கலுக்கு திங்கள்கிழமையே (டிச.16) கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் மனு தாக்கலுக்கு ஆா்வமுடன் வந்தனா். அதிகாலை முதலே மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பலரும் குடை பிடித்துக்கொண்டு மனு தாக்கல் செய்ய வந்தனா்.

திமுகவைச் சோ்ந்த பேராவூா் மனோகரன், சூரன்கோட்டை அருண்குமாா் ஆகியோா் ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு மனு தாக்கல் செய்தனா்.

சித்தூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு வன்னிவயலைச் சோ்ந்த ஜெயசித்ரா என்பவா் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவருடன் வந்த பெண்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து வழியனுப்பினா்.

ஜெயசித்ரா ஏற்கெனவே ஊராட்சித் தலைவராக இருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக போட்டியிடுவதாக கூறினாா்.

அதேபோல பல கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்ய வந்த பெரும்பாலான பெண்களுக்கு மற்ற பெண்கள் குலவையிட்டு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பினா்.

மனுத்தாக்கலுக்கு வந்தவா்கள் ஆதரவாளா்களுடன் வாகனங்களில் வந்ததால் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையப் பகுதியே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com